3வது ஒருநாள் போட்டியின் பிளையிங் 11, வெற்றி கணிப்புகள், பிட்ச் அறிக்கை ஒரு பார்வை.!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்த தொடரின் இறுதி மற்றும் 3 வது ஒருநாள் போட்டிக்கான பிட்ச் அறிக்கை, பிளையிங் 11 உள்ளிட்ட முக்கிய விவரங்கள் குறித்து காண்போம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2 ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்று தொடரில் சம நிலையில் உள்ளார்கள்.இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள 3வது ஒருநாள் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
ஒருநாள் போட்டி குறித்த விவரம் :
போட்டி : 3வது ஒருநாள் போட்டி
நாள் & தேதி : புதன்கிழமை & 22/03/2023.
நேரம் : 1:30 P.M (IST).
மைதானம் : எம்.எ. சிதம்பரம் மைதானம், சென்னை.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி +ஹாட்ஸ்டார்.
பிட்ச் அறிக்கை :
சென்னை சிதம்பரம் மைதானத்தில் வேக பந்து பவுலர்கள் ஒரு காலத்தில் அசத்திய நிலையில் சமீப காலமாக ஸ்பின்னர்கள் தான் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ரன்கள் பெரிய அளவில் பதிவாகவில்லை, குறிப்பாக 2 இன்னிங்ஸிலும் சராசரியாக 250 ரன்களுக்கு மேல் எந்த அணியும் ரன்கள் பெறவில்லை.
இதுவரை நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் விவரங்கள் :
மொத்த போட்டிகள் : 145
இந்தியாவின் வெற்றிகள் : 54
ஆஸ்திரேலியா வெற்றிகள் : 81
ரத்தான போட்டிகள் : 10
வெற்றி கணிப்பு :
இந்த ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றிகளுடன் 1-1 என்ற சம நிலையில் உள்ளது, அடுத்து நடைபெற உள்ள 3வது ஒருநாள் போட்டி தொடரின் வெற்றி முடிவை உறுதி படுத்தும் போட்டி என்பதால் இரு அணிகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு கட்டாயம் வெற்றி பெற முயற்சிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது, இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி சிறந்த பார்மில் இருப்பதாக தெரிகிறது எனவே இரு அணிகளுக்கும் 3 வது ஒருநாள் போட்டியில் வெற்றி வாய்ப்பு சரி சமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பிளேயிங் 11(தோராயமான) : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் 11(தோராயமான) : டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி (வி.கீ), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.