IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிலையான தொடக்கம்.!! ஷமி, அஸ்வின் , ஜடேஜா அசத்தல்.!!
![IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிலையான தொடக்கம்.!! ஷமி, அஸ்வின் , ஜடேஜா அசத்தல்.!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1753.jpg)
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிலையான தொடக்கத்தை அளித்த நிலையில் இந்திய அணியின் பௌலர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு முதல் நாள் முடியும் முன்னரே முடிவு கட்டினார்கள்.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார், இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இந்திய அணியின் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 81(125) ரன்களை பெற்ற நிலையில் தனது விக்கெட்டை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா இடம் பறிகொடுத்தார், ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் விக்கட்டை மிகவும் விரைவாக இந்திய அணியின் அஷ்வின் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் உடனுக்குடன் தங்கள் விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை தனது விக்கெட்டை இழக்காமல் அணியின் ஆல்ரவுண்டர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 72*(142) ரன்களை பதிவு செய்தார், இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களை பதிவு செய்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்திய வேகப்பந்து பவுலர் முகமது ஷமி 14.4 ஓவர்கள் வீசி 4 ஓவர்கள் மெய்டன் செய்து 60 ரன்களை வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார், முறையே அஸ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.