IND VS AUS ODI 2023 : 2வது ஒருநாள் போட்டியின் கணிப்புகள் அடங்கிய முன்னோட்டம்..!! | ind vs aus 2nd odi 2023 preview

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள 2வது ஒருநாள் போட்டியின் பிளையிங் 11, பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்புகள் உள்ளிட்டவை குறித்து முக்கிய தகவல்களை காண்போம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதனை அடுத்து 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் தொடரை கைப்பற்றி விடும், அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்தாலும், அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இந்நிலையில் இந்திய அணி சிறந்த பேட்டிங்கை 2வது ஒருநாள் போட்டியில் வெளிப்படுத்த முற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் முதல் ஒருநாள் போட்டியில் அணியில் இருந்து விலகிய கேப்டன் ரோஹித் சர்மா 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்குவார் என்பதால் பேட்டிங் ஆர்டர் உறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஸ்மித் மற்றும் முன்னணி வீரர்கள் மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.இந்நிலையில் 2 வது ஒருநாள் போட்டி மிகவும் சுவாரசியமாக அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் போட்டி குறித்த விவரங்கள் :
போட்டி : இரண்டாவது ஒருநாள் போட்டி
நாள் & தேதி : ஞாயிற்றுக்கிழமை & 19/03/2023.
நேரம் : 1:30 P.M (IST).
மைதானம் : டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம்.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி +ஹாட்ஸ்டார்.
பிட்ச் அறிக்கை :
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள 2வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ள விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் உதவும் என்று தெரியவந்துள்ளது, மேலும் இந்த மைதானத்தில் ஸ்பின் பவுலர்கள் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ஒரு சில போட்டிகளை தவிர அனைத்து போட்டிகளிலும் சராசரியாக 250 ரன்கள் பதிவாகி உள்ளது.
வெற்றி கணிப்பு :
முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருப்பதால், 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முழு வீச்சில் செயல்படுவார்கள். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்தால் 2வது ஒருநாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற முழு வீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று முன்னணி உள்ள இந்திய அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் விவரங்கள் :
மொத்த போட்டிகள் : 144
இந்தியாவின் வெற்றிகள் : 54
ஆஸ்திரேலியா வெற்றிகள் : 80
ரத்தன போட்டிகள் : 10
இந்திய அணியின் பிளேயிங் லெவன்(தோராயமான) : ஷுப்மான் கில், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல்(வி.கீ), ஹர்திக் பாண்டியா(து.கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன்(தோராயமான) : டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலீஷ்(வி.கீ), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.