IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் 11, வெற்றி கணிப்பு, பிட்ச் அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் ஒரு பார்வை.. !!
![IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் 11, வெற்றி கணிப்பு, பிட்ச் அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் ஒரு பார்வை.. !!](https://www.sportspartans.com/assets/uploads/news-1732.jpg)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது, இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது, பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் 2வது டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்கும் ஆஸ்திரேலியா அணி நடக்கவிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தனது நிலையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டெஸ்ட் போட்டி குறித்த விவரங்கள்:
போட்டி : இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி
நேரம் : 9.30 A.M (IST)
நாள் : வெள்ளிக்கிழமை (போட்டி தொடங்கும் நாள் )
தேதி : பிப்ரவரி 17,2023(முதல் நாள்) - பிப்ரவரி 21, 2023
இடம் : அருண் ஜெட்லி மைதானம் , டெல்லி.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி + ஹாட்ஸ்டார்.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெறும் டெல்லி மைதானம் ஸ்பின் பவுலர்களுக்கு மிகவும் உதவும் என்று தெரிய வந்துள்ளது, முதல் இன்னிங்சில் பிட்ச் ஸ்லோவ் ஆக இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.அதன்பின் வழக்கம் போல் ஸ்பின்னர்கள் களத்தில் இறங்கி தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
வெற்றி கணிப்பு :
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது, இந்நிலையில் இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தனது முன்னிலையை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்க படுகிறது.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை இந்த ஆண்டு முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து உலகின் நம்பர் 1 அணியாக உள்ளது , எனவே முதல் டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு இந்த 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முழுவீச்சில் செயல்படும் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்திய மண்ணில் நடைபெறும் போட்டி என்பதாலும் இந்திய அணி 1-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளதாலும், 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற இந்தியா VS ஆஸ்திரேலியா டெஸ்ட்
போட்டிகள் விவரங்கள் :
மொத்த போட்டிகள் : 103
இந்திய அணி வெற்றிகள் : 31
ஆஸ்திரேலியா அணி வெற்றிகள் : 43
டிராவில் முடிந்த போட்டிகள் : 28
டை ஆனா போட்டி : 1
இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : ரோஹித் சர்மா (கேப்டன் ), கே.எல். ராகுல், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பரத் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (வி.கீ), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியோன், டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க்.