IND VS AUS TEST 2023 : ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம் விதிப்பு.!! முதல் டெஸ்டில் நிகழ்ந்த குழப்பம்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாக்பூரில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார், இந்நிலையில் ஐசிசி ஜடேஜாவுக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக அறிவித்துள்ளது.
இந்திய அணிக்காக முதல் இன்னிங்சில் ஜடேஜா பந்து வீசிய போது போட்டியின் நடுவர்கள் அனுமதி இல்லாமல் விரல்களில் வலி நிவாரணியை தடவினார், அந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்ட நிலையில் ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.
ஐசிசியின் இந்த செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜா போட்டியில் சிறப்பாக பந்து வீசிய காரணத்திற்காக எழுந்த விமர்சனங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் ஐசிசி அபராதம் விதித்துள்ளது என்று கூறி ஐசிசி மீதான தங்கள் அதிர்ப்தியை இந்திய ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய அணிக்காக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 70(185) ரன்கள் அடித்து, பவுலிங்கில் 7 விக்கெட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா தனது முதல் போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் திறன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.