ஒருநாள் உலக கோப்பை தொடர் ஆரம்பிக்கும் தேதி வெளியானது..?? தொடருக்கான இந்திய மைதானங்கள் குறித்த அப்டேட்..?? | odi world cup 2023 starting date

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலககோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடர் ஆரம்பிக்கும் தேதி மற்றும் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ சார்பில் ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. உலக கோப்பை தொடர் போட்டிகள் நடத்த இந்தியாவில் 12 இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, குறிப்பாக பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய இடங்கள் தேர்வாகி உள்ளது.
2023 ஒருநாள் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஆரம்பமாகி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், மேலும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது, பொதுவாக ஐசிசி தரப்பில் இருந்து உலக கோப்பை தொடருக்கான அட்டவணை ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி விடும் ஆனால் பிசிசிஐ தரப்பில் இருந்து பாகிஸ்தான் அணி பங்கேற்புக்கு அனுமதியை இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெற உள்ளதால் இன்னும் போட்டிக்கான அட்டவணை வெளியாகாமல் நிலுவையில் உள்ளது.
அதே சமயத்தில் இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் போது வானிலை மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், போட்டி நடைபெறும் இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் பிசிசிஐ தரப்பில் இருந்து உலக கோப்பை போட்டிகள் குறித்து இறுதி முடிவு எடுக்க தாமதம் ஆகிறது என்று தெரிய வந்துள்ளது.
இந்திய மண்ணில் கடைசியாக பாகிஸ்தான் அணி 2013 ஆம் நடந்த ஐசிசி தொடருக்கு பிறகு இன்னும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் விரைவில் 2023 ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அட்டவணை மற்றும் முக்கிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக கேப்டன் கபில்தேவ் தலைமையில் ஒரு நாள் உலகக் கோப்பையை முதல் முறையாக கையாற்றியது.அதன்பின் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை
எம்.எஸ்.தோனி தலைமையில் ஆனா இந்திய அணி கைப்பற்றி அசத்தியது, இந்நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.