ICC WOMEN T20 WORLD CUP : தொடங்கியது மகளிர் உலக கோப்பை சாதிக்குமா இந்திய அணி..?? போட்டிகள் குறித்து ஒரு பார்வை..!!

உலக அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் மகளிர் கிரிக்கெட்டிற்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறார்கள், இந்நிலையில் மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் இன்று (பிப்ரவரி 10 2023) தொடங்கியுள்ளது, இந்த தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மகளிர் கிரிக்கெட் தொடரை உலகளவில் பெருமைப்படுத்தும் விதத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது, இதில் இதுவரை ஆஸ்திரேலியா அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி வருகிறது.
இதுவரை இந்திய மகளிர் அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இந்திய அணி முதன் முறையாக கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இறுதி வரை சென்று ஆஸ்திரேலியா அணியிடன் தோல்வியை தழுவியது, இம்முறை கண்டிப்பாக இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மகளிர் அணியை உத்வேகமூட்டும் வகையில் இந்திய அண்டர் 19 மகளிர் அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அண்டர் 19 மகளிர் உலக கோப்பையை வென்று அசத்தியது, இந்த தரமான சம்பவம் இந்திய மகளிர் அணியை சிறப்பான முறையில் விளையாட தூண்டும் என்று எதிர்பார்க்க படுகிறது.
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் லீக் போட்டி விவரங்கள் :
நாள் |
நேரம் (IST ) |
போட்டி |
இடம் |
பிப்ரவரி 12,2023 |
6:30 P.M |
இந்தியா VS பாகிஸ்தான் |
கேப் டவுன் |
பிப்ரவரி 15,2023 |
6:30 P.M |
இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் |
கேப் டவுன் |
பிப்ரவரி 18,2023 |
6:30 P.M |
இந்தியா VS இங்கிலாந்து |
கெபிர் ஹா |
பிப்ரவரி 20,2023 |
6:30 P.M |
இந்தியா VS அயர்லாந்து |
கெபிர் ஹா |
டி20 உலக கோப்பையில் கலந்து கொள்ளும் இந்திய மகளிர் அணி :
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), அஞ்சலி சர்வாணி, யஸ்திகா பாட்டியா, ஹர்லீன் டியோல், ராஜேஸ்வரி கைக்வாட், ரிச்சா கோஷ், ஷிக்கா பாண்டே, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிகஸ், ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, பூஜா வஸ்திர ஆர், ராதா யாதவ்.