டெஸ்ட் தரவரிசையில்...ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி...இந்தியா முதல் இடம்!

வருடாந்திர டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஐசிசியானது டெஸ்ட் தவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது 2020ம் ஆண்டு மே முதல் 2022ம் ஆண்டு மே வரையிலான போட்டி முடிவுகளின் அடிப்படையில் 50 சதவிகிதமும், 2022 முதல் இப்போது வரையிலான போட்டி முடிவுகளின் அடிப்படையிலும் டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஆஸ்திரேலிய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆனால் விதிகளின் படி, 6 புள்ளிகள் குறைந்து 116 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு இறங்கிவிட்டது.
அதுவே இந்திய அணி 119 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருந்தது, ஆனால் 2020 - 2022 வரையிலான போட்டிகளை கணக்கில் கொண்டு தரவரிசை பட்டியலிடப்பட்டதால் 121 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி 3ம் இடத்தில் உள்ளது. இந்த தரவரிசையில் அடிப்படையில், 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா-ஆஸ்திரேலியா வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன.
இதுவே ஐசிசி டி20 தரவரிசையை பார்த்தால், 267 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும், 259 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 2ம் இடத்திலும் உள்ளன. மேலும் முதல் ஐந்து இடங்களில் ஆஸ்திரேலியா அணி இல்லவே இல்லை.