Representative Image.
ICC T20 World Cup 2022 IND vs SA : இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மோதலில் இந்தியாவின் பிளெயிங் லெவெனில் கேப்டன் ரோஹித் சர்மா மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை 2022 இன் முதல் இரண்டு சூப்பர் 12 ஆட்டங்களில் ஒரே வீரர்களை கொண்டு விளையாடிய பிறகு, இன்று இந்திய அணி முதல் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அக்சர் படேல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தீபக் ஹூடாவை களமிறக்கி இந்திய அணி பேட்டிங்கை வலுப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தொடக்கப் போட்டியில் அக்சர் ஒரு ஒரு ஓவர் மட்டுமே வீசினார். ஆனால் நெதர்லாந்திற்கு எதிரான மிகப்பெரிய வெற்றியின் போது முழுமையாக 4 ஓவர்கள் வீசினார். இந்நிலையில், மூன்றாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அக்சர் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உள்நாட்டு தொடரில் விளையாடினார். அங்கு அவர் 9.11 என்ற எகானமியில் மூன்று போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெர்த்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து இரண்டாவது ஆல் ரவுண்டராக ஹூடா விளையாடும் XI இல் உள்ளார்.
இதே போல் இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்க அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தபிரைஸ் ஷம்சி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக லுங்கி ங்கிடி அணியின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், போட்டியில் தாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 7 ஓவர் முடிவதற்குள் ராகுல், ரோஹித், கோலி என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறி வருகிறது.