WORLD TEST CHAMPIONSHIP 2023 : இறுதி போட்டிக்கு மிக அருகில் இந்திய இந்திய அணி…!! ஆஸ்திரேலியா அணிக்கு ஆபத்து..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் 2 வெற்றிகளை இந்திய அணி பெற்ற நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் அணிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய அணி, இந்திய அணி, இலங்கை அணி மற்றும் தென்னாபிரிக்கா அணி ஆகிய நான்கு அணிக்கும் வாய்ப்புள்ளதாக பார்டர் கவாஸ்கர் தொடர் தொடங்கும் முன் தகவல் வெளியானது, தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு இறுதி போட்டிக்கு செல்ல இருந்த வாய்ப்பு பறிபோனது.
அதாவது இந்திய அணி டெல்லி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 66.67வெற்றி சதவீதத்துடன் 1 வது இடத்திலும், 64.06 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது, இலங்கை அணி 53.33 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது.தற்போதைய நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா விளையாட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது, இந்நிலையில் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற வகையில் வென்று விட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் சிக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி 2-0 என்ற நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி விட்டால், அதே சமயத்தில் 2-2 என்ற நிலையில் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை சமன் செய்தது என்றால் இந்திய அணிக்குப் பதிலாகவும் அல்லது 0-4 என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்தது என்றாலும் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு தோல்வியை தழுவினால் கூட ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதி ஆகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐசிசி சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்புள்ள அணிகளின் தற்போதைய சதவீதங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி வாய்ப்பு : 88.9% |
ஆஸ்திரேலியா vs இலங்கை இறுதிப் போட்டி வாய்ப்பு : 8.3% |
இந்தியா vs இலங்கை இறுதிப் போட்டி வாய்ப்பு : 2.8% |