ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசத்தும் இந்திய வீரர்கள்..!! வலுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், அண்மையில் வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் வீரர்கள் தான் என்று கூறினால் மிகையில்லை, குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்கள்.
அதன் அடிப்படையில் ஐசிசியின் டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், இரண்டாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும் தொடர்ந்து இடம்பெற்று அசத்தி இருக்கிறார்கள். இந்திய அணிக்காக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் 5வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்கு சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி தொடர்ந்து அசத்தி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 8 வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் இந்திய அணி மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக புதிய மைல்கல்லை அடையும் ரசிகர்கள் இணையத்தில் பதி விட்டு நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.