IND VS AUS TEST 2023 : ஹர்திக் பாண்டியாவை இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு தர வேண்டும்..!! முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து..!!

ஆஸ்திரேலியா அணியிடம் 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில் இந்திய அணியின் மீது பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் இயன் சாப்பல் இந்திய டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியா ஏன் இடம்பெறுவது இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது, இந்த தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னணியில் இருந்த நிலையில் கடைசியாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த 3 வது டெஸ்ட் போட்டி மிகவும் விரைவாக 3வது நாள் தொடக்கத்திலேயே முடிவடைந்து விட்டது, மேலும் இரண்டு நாட்களில் 30 விக்கெட்டுகள் விழுந்தது, இதனால் போட்டி நடைபெற்ற இந்தோர் மைதானத்தின் பிட்ச் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் குழப்பம் உள்ளதாக கருத்துக்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பலப்படுத்தும் வகையில் அசத்தல் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஏன் டெஸ்ட் அணியில் இடம்பெறுவது இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் இயன் சாப்பல் கேள்வி எழுப்பி உள்ளார். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் அணியில் இடம் பெற்றால் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் என இரண்டிலும் உதவுவார், அதேபோல் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா பக்க பலமாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் உதவுவார் என்று இயன் சாப்பல் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய இயன் சாப்பல் கூறியது சிலர் என்னிடம் காயத்தில் இருந்து மீண்ட பிறகு ஹர்திக் பாண்டியாவால் அதிக நேரம் பந்து வீச முடியாது என்கிறார்கள், ஒரு கிரிக்கெட் வீரராக தன்னால் எந்த அளவிற்கு போட்டியில் பங்களிப்பை அளிக்க முடியும் என்று ஹர்திக் பாண்டியா தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடி உள்ளார்.அதன்பின் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால் அணியில் இருந்து விலகி ஓய்வில் இருந்து பிறகு, மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா லிமிடெட் ஓவர்கள் பார்மட்டில் மட்டும் விளையாடி வருகிறார். மேலும் தற்போது டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.