சஞ்சு சாம்சனிடம் என்னமோ மீஸ் ஆகுது: ரவி சாஸ்திரியின் அக்கறை

மும்பை : சஞ்சு சான்சன் கிரிக்கெட் வாழ்க்கை முடியும்போது அவர் எந்த சாதனைகளையும் செய்யாமல் இருந்தால் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக அவர் இந்திய ஒரு நாள் அணியில் 2021 ஆம் ஆண்டு ஜூனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டிகள் தான் அவர் அறிமுகமானார். அதன் பிறகு அடுத்த ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஜூலை மாதத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றார்.
அந்த தொடரில் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடி ஒரு அரை சதமும் அடித்தார்.அதன் பிறகு சஞ்சு சாம்சன் ஒட்டுமொத்தமாக 11 ஒரு நாள் போட்டிகள் விளையாடி 330 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 66 ஆகும். தற்போது மீண்டும் அவருக்கு வெஸ்ட் இண்டிஸ் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து பேசிய ரவி சாஸ்திரி சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னர்.
அவருடைய முழு திறமையையும் சஞ்சு சம்சன் இன்னும் நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. எப்போதும் அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்பது போல் எனக்கு தெரியும். சஞ்சு சான்சன் கேரியர் முடியும்போது அவர் எந்த சாதனைகளையும் செய்யாமல் முடித்துக் கொண்டால் நான் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன். நான் ஒரு பயிற்சியாளராக இருக்கும் போது ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட மாட்டார். அது எனக்கு பார்க்கும்போது மனவேதனையாக இருக்கும்.
ஆனால் அதன் பிறகு தொடக்கம் வீரராக ரோஹித் சர்மா களம் இறங்கினார். நான் ரோகித் சர்மாவை எப்படி மிஸ் செய்தேனோ, அதேபோல் தான் சஞ்சு சாம்சனையும் நினைக்கிறேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ரிஷப் பண்ட்க்கு காயம் இன்னும் குணமடையாத நிலையில் கே எல் ராகுலும் தற்போது இந்திய அணிக்கு திரும்புவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலககோப்பைக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.