ENG VS NEW TEST 2023 : இளம் இங்கிலாந்து வீரர் ஹார்ரி புரூக் அசத்தல் ..!! 30 ஆண்டு கால இந்திய வீரரின் சாதனை முறியடிப்பு..!!

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய இளம் இங்கிலாந்து வீரர் ஹார்ரி புரூக் 30 ஆண்டு காலமாக இருந்த இந்திய வீரர் சாதனைகளை முறியடித்து அசத்தினார்.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 267 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று சர்வதேச டெஸ்ட் அரங்கில் அசத்தினார்கள், இதையடுத்து இன்று (24.02.2023) தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி உடனுக்குடன் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் அணியின் நிலையில் சரி செய்யும் வகையில் போராடி வந்த ஜோ ரூட் உடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் ஹார்ரி புரூக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர், இந்நிலையில் ஹார்ரி புரூக் பவுண்டரிகள் மற்றும் சிஸேர்கள் என எதிரணி பவுலர்களை சிதறடித்து விரைவாக சதம் அடித்து 100*(107) போட்டியை தலைகீழாக மாற்றினார்.
முதல் நாள் முடிவில் ஹார்ரி புரூக் 184*(169 ) ரன்கள் பதிவு செய்து ஒரு முனையில் அசத்திய நிலையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ வீரர் ஜோ ரூட் 101*(182) சதம் அடித்தார், எனவே முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 315/3 ரன்கள் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் அதிரடி வெளிப்படுத்திய இளம் வீரர் ஹார்ரி புரூக் முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி உடைய சாதனையை முறியடித்து அசத்தினார்.
அதாவது இந்திய அணியின் ஜாம்பவான் வினோத் காம்ப்ளி டெஸ்ட் தொடரில் விளையாட தொடங்கிய ஆரம்பத்தில் விரைவாக முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் பதிவு செய்து சாதனை படைத்தார், ஆனால் தற்போது இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹார்ரி புரூக் 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் பெற்று 30 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் சாதனையை முறியடித்து மிரட்டிய நிலையில், டெஸ்ட் அரங்கில் 9 இன்னிங்ஸில் வேகமாக 800 ரன்கள் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஹார்ரி புரூக் 4 சதங்கள் அடித்து சர்வதேச அரங்கில் அசத்தி வருகிறார், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் 184*(169) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழக்காமல் உள்ள நிலையில் தனது முதல் இரட்டை சதத்தை நாளை 2வது நாள் ஆட்டத்தில் டெஸ்ட் அரங்கில் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.