டெஸ்ட் தொடர் பங்கேற்பு குறித்து ஹர்திக் பாண்டியா வெளிப்படையான பதில் ..!!

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவது குறித்து பல பேச்சுக்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதற்கான பதிலை ஹர்திக் பாண்டியா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளனர், இந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி 2வது முறையாக முன்னேறி உள்ளது, முதல் முறை நியூசிலாந்து அணியுடன் மோதி இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், தற்போது கட்டாயம் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பெறும் எண்ணத்தில் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி தனது சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது, இங்கிலாந்து மண்ணில் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த அணியில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க பட வேண்டிய நிலையில் உள்ளது. மேலும் பேட்டிங் ஆர்டரில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இதனால் பேட்டிங் மற்றும் வேகப்பந்து பவுலிங் செய்ய கூடிய ஆல்ரவுண்டர் அணியில் இடம் பெற்றால் அணிக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது,எனவே இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியவை டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெற வைக்க வேண்டும் என்று பேச்சுக்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்தன.இதற்கு தற்போது ஹர்திக் பாண்டியா தனது பதிலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ள ஒருநாள் போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் பாண்டியா கூறியது, டெஸ்ட் அணியில் தற்போதைய நிலையில் நான் இடம் பெற விரும்பவில்லை என்று கூறினார், மேலும் அதற்காக நான் இன்னும் தயாராக வில்லை என்று கூறினார். டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் நான் முழுமையாக ஆரம்பத்தில் இருந்து முயன்று திறனை நிரூபித்து என்னுடைய வாய்ப்பை பெறுவேன் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய பாண்டியா கூறியது, தற்போதைய நிலையில் டெஸ்ட் அணி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலும் இடம்பெறும் எண்ணத்தில் நான் இல்லை என்று வெளிப்படையாக தனது பதிலை கூறினார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் தொடரில் விரைவில் பங்கேற்பார் என்று எழுந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.