3 வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்..!! ஹர்திக் மற்றும் குல்தீப் அசத்தல்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது, இந்நிலையில் பவுலிங் செய்த இந்திய அணியை ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் துவம்சம் செய்தார்கள்.
இதையடுத்து இந்திய அணியின் நிலையை சரி செய்யும் வகையில் களத்தில் இறங்கி அசத்தல் பவுலிங் வெளிப்படுத்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதாவது ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 33(31) மற்றும் மிட்செல் மார்ஷ் 47 (47) விக்கெட்டுகளை கைப்பற்றினார், அடுத்து அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை 0(3) டக் அவுட் ஆக்கினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்டிங்குக்கு ஹர்திக் பாண்டியா முடிவு கட்டினார், அடுத்து அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் முன்னணி வீரர்கள் டேவிட் வார்னர் 23(31) மற்றும் மார்னஸ் லாபுசாக்னே 28(45) விக்கெட்டுகளை கைப்பற்றி பெவிலியன் அனுப்பினார்.
அதன்பின் அலெக்ஸ் கேரி மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வந்தார்கள், அவர்கள் இருவரின் விக்கெட்டுகளை இந்திய அணியின் ஸ்பின்னர்கள் குல்தீப் மற்றும் அக்சார் கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இறுதியாக ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
இந்திய அணி பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை 269 ரன்களுக்கு சுருட்டினார்கள், தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை கைப்பற்றுவார்கள் என்று பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.