ஐபிஎல் 2023 : சென்னை அணியின் முக்கிய வீரர் ஜடேஜா தான் .!! ஹர்பஜன் சிங் கணிப்பு..!!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டங்களை வென்று முக்கிய அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளங்குகிறது, கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையில் சிறந்த அணியாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலம் வருகிறது. ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் ,மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியது, இந்த 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என்று கூறினார்.தற்போதைய நிலையில் சென்னை அணிக்காக சிறந்த பேட்டிங் மற்றும் 4 ஓவர்களில் சிறந்த பவுலிங்கையும் வெளிப்படுத்தி அசத்துவார் என்று கூறினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் காயத்தில் இருந்து மீண்டு வந்து பங்கேற்ற ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.ஜடேஜா தற்போது நல்ல பார்மில் உள்ளதால் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைவார் என்று ஹர்பஜன் சிங் எதிர்பார்த்ததாக கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளேயிங் லெவனில் என்னுடைய கணிப்பு படி இடம் பெற வாய்ப்புள்ள 4 வெளிநாட்டு வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, டேவன் கான்வே மற்றும் மகேஷ் தீக்ஷனா என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மார்ச் 31 ஆம் தேதி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.