மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்த பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இவர்கள் தான் ..!! ஹர்பஜன் சிங் கணிப்பு..!! | harbhajan pick for mi in ipl 2023

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகியுள்ள அதிரடி வீரர்கள் கீரன் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இடத்தை அடுத்து நிரப்ப வாய்ப்பு உள்ள புதிய வீரர்கள் பற்றி மும்பை அணியின் முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் முக்கிய கருத்தை பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்று முன்னணி அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி விளங்குகிறது.இந்த அணியின் தூணாக விளங்கியவர்கள் அணியில் முன்பு இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர்கள் கீரன் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தான் என்று கூறினால் மிகையில்லை.
தற்போது மும்பை அணியில் இவர்கள் இருவரும் இல்லாத நிலையில், அந்த இடங்களை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சிறந்த பதில் அளித்துள்ளார். அதாவது மும்பை அணியின் வெற்றிக்காக மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இடத்தை இளம் வீரர்கள் டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிறீன் நிரப்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் மும்பை அணியில் பொல்லார்ட் இடத்தில் டிம் டேவிட் மற்றும் ஹர்திக் பாண்டியா இடத்தில் கேமரூன் கிரீன் ஆகிய இருவரும் கண்டிப்பாக நிரப்ப முழு திறன் உடைய வீரர்கள் என்று கூறினார். மேலும் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை முதல் போட்டியில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக வேண்டும் அப்போது தான் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டம் தொடரும் இல்லை என்றால், தொடரின் நடுவில் போட்டியில் வெற்றி பெற மிகுந்த கஷ்ட பட வேண்டியது இருக்கும் என்று கூறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி படு தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கட்டாயம் வெற்றிகளை குவிக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏப்ரல் 2ஆம் தேதி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.