ராஜஸ்தான் அணிக்கு டார்கெட் பிக்ஸ் பண்ண குஜராத்...முதல் இன்னிங்ஸ் அப்டேட்! | GT vs RR IPL 2023 1st Innings Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 23வது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. எனவே, ஹர்டிக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
முதல் ஓவரில் குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சாஹா மற்றும் ஷுப்மான் கில் சற்று திணறலுடன் விளையாடினர். இதானல் முதல் ஓவரிலையே விருத்திமான் சாஹா ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷுப்மான் கில் தெளிவாக நின்று அணியின் வெற்றிக்காக விளையாட ஆரம்பித்தார். அவருடன் பார்ட்னர்ஷிப் வைத்துக்கொண்ட சாய் சுதர்சன் (20) மற்றும் ஹர்திக் பாண்டியா (28) இருவரும் அவுட் ஆகினர்.
இருப்பினும் குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள் பௌலிங்கை துவம்சம் செய்து தாக்கி பிடித்தார் ஷுப்மான் கில். ஆனால் 15வது ஓவரில் சந்தீப் ஷர்மாவின் பத்து வீச்சில் 45 ரன்களுடன் அவுட் ஆகினார். இதனைத் தொடர்ந்து அபினவ் மனோகர் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் பொறுப்புடன் அணியின் வெற்றிக்காக விளையாட ஆரம்பித்தனர்.
அபினவ் மனோகர் பொறுமையாக விளையாடி மொத்தம் 3 சிக்ஸ்களை அடித்து விளாசினார். இதனால் அபினவ் மனோகர் மற்றும் டேவிட் மில்லரின் பார்ட்னர்ஷிப்பில் குஜராத் அணி மொத்தம் 65 ரன்களை எடுத்தது. ஆனால் 18வது ஓவரில் அபினவ் மனோகர் அவுட் ஆனது ஆட்டத்தின் நிலையை சுழற்றிவிட்டது. இது ராஜஸ்தான் அணிக்கு வெற்றிக்கான மேலும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரைத் தொடர்ந்து களமிறங்கினார் ராகுல் தெவாடியா. ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிமிடத்தில் இறுதி ஓவரில் குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வழியாக முதல் இன்னிங்ஸ் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 177/7 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 178 ரன்கள் இலக்கை கொண்டு விளையாட ஆரம்பிக்கிறது.