ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மில்லர் இல்லை..!! குஜராத் டைட்டன்ஸ் அதிருப்தி..!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மிகவிரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தொடரின் முதல் சில போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வீரர்கள் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அணிகள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரில் நேரடியாக தகுதி பெறும் பொருட்டு, உலக கோப்பை சூப்பர் லீக் சுற்றில் நெதர்லாந்து அணியுடன் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கட்டாய வெற்றி பெறும் நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது.
இந்த 2 ஒருநாள் போட்டிகள் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதால் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த தென்னாபிரிக்கா வீரர் டேவிட் மில்லர், தனது அணி நிர்வாகம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தான் பங்கேற்க முடியாததால் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய டேவிட் மில்லர், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், தனது நாட்டுக்காக முக்கிய போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அது மிகவும் மிகவும் முக்கியமானதாக தற்போதைய நிலையில் உள்ளது என்று கூறினார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட தென்னாப்பிரிக்கா அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் அணியின் முன்னணி வீரர்கள் அணியில் கட்டாயம் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருக்கும் முக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் முறையே,
1) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஐடன் மார்க்ராம் ,ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன்.
2) குஜராத் டைட்டன்ஸ் -டேவிட் மில்லர்
3) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குயின்டன் டி காக்
4) மும்பை இந்தியன்ஸ் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ்.
5) பஞ்சாப் கிங்ஸ் - காகிசோ ரபாடா
6) டெல்லி கேபிட்டல்ஸ் - அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி எங்கிடி.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.