குஜராத் டைட்டன்ஸ் அணியில் வில்லியம்சன் இடத்தில் களமிறங்க உள்ள அதிரடி வீரர்..!!

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி மிரட்டல் வெற்றிகள் பெற்று அசத்தி வருகிறது, மேலும் இந்த அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் புதிய முன்னணி ஆல்ரவுண்டர் அணியில் இணைந்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் அரங்கில் களமிறங்கி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐபிஎல் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது, அந்த வெற்றி பயணத்தை நடப்பு 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணி தொடர்கிறது.
இதுவரை ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளையும் அதிரடியாக வென்று தோல்வியே சந்திக்காத அணியாக உள்ளது. இந்த தொடரில் இருந்து குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வெளிநாட்டு வீரர் கேன் வில்லியம்சன் காலில் காயம் ஏற்பட்ட மலையில் தொடரில் இருந்து முழுமையாக விலகினார்.
இதனை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் ஐபிஎல் 2023 தொடரில் கேன் வில்லியம்சன் இடத்தில் விளையாட இலங்கை அணியின் அதிரடி வீரர் தசுன் ஷானக ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஐபிஎல் அரங்கில் 50 லட்சத்திற்கு ஒப்பந்தம் ஆகி முதல் முறையாக களமிறங்க உள்ள ஷானக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.