ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிரட்டல் பிளேயிங் லெவன்..!! | ipl 2023 gt best playing 11

ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அனைத்து முன்னணி அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் கடந்த ஆண்டு புது அணியாக தொடரில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கி சாம்பியன் பட்டத்தை பெற்று அசத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்த 2023 ஆம் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெறும் அளவுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி சிறந்த பார்மில் உள்ள வீரர்களைக் கொண்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியா, இந்திய அணியை பல முறை டி20 தொடர்களில் வழிநடத்தியத்தில் சிறந்த அனுபவ கேப்டனாக முன்னேறி உள்ளார். அதன்பின் துவக்க வீரர் இடத்தில் களமிறங்க உள்ள ஷுப்மான் கில் இந்த ஆண்டு மிரட்டல் பார்மில் உள்ளதால் அணிக்கு மிகவும் பலமாக அமைந்துள்ளது. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முன்னணி வீரர் டேவிட் மில்லர் முதல் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இதனை அடுத்து அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள கேன் வில்லியம்சன் மிடில் ஆர்டரில் அணிக்கு பலம் சேர்க்கிறார், மேலும் ஆல்ரவுண்டர் இடத்தில் ராகுல் டெவாடியா, ரஷீத் கான் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.அதே சமயத்தில் பவுலிங்கில் வேகத்தில் முகமது ஷமி, சிவம் மாவி மற்றும் அல்சாரி ஜோசப் மிரட்டுவார்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இடத்தில் சாய் கிஷோர் மற்றும் ரஷீத் கான் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.
ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் மிரட்டும் அணியாக சிறந்த பிளேயிங் லெவன் உடன் களமிறக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் அடுத்த முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள ஹர்திக் பாண்டியா தனது சிறந்த கேப்டன்சி மூலம் அணியின் வெற்றிக்கு முழு வீச்சில் செயல்படுவார் என்பதில் ஐயமில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் : ஷுப்மான் கில், விரிதிமான் சாஹா, கேன் வில்லியம்சன், டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ராகுல் டெவாடியா, ரஷித் கான், சாய் கிஷோர், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, சிவம் மாவி.