சாய் சுதர்சன் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் அசத்தல்..!! டெல்லி அணி சொதப்பல்..!! | ipl delhi capitals vs gujarat titans highlights

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் 7 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், தொடர்ச்சியாக பரபரப்பாக சென்ற போட்டியில் இறுதியாக வழக்கம் போல் குஜராத் டைட்டன்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் ஆரம்பத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலிங்கில் மிகவும் தடுமாறி ரன்கள் பெற முடியாமல் இருந்தார்கள். அதன்பின் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் முன்னணி ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் சற்று பொறுப்புடன் விளையாடினார்கள்.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் பதிவு செய்தது, அடுத்த இன்னிங்ஸில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க வீரர் விரித்திமான் சாகா 14(7) மற்றும் ஷுப்மான் கில் 14(13) விக்கெட்டை டெல்லி அணியின் வேகப்பந்து பவுலர் அன்ரிச் நார்ட்ஜே அதிரடியாக கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வேகமாக பெவிலியன் திரும்பினார்.
டெல்லி அணி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது, பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிலையை சரி செய்யும் வகையில் களமிறங்கிய தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் ஷங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க தொடங்கினார்கள். அதன்பின் விஜய் ஷங்கர் 29(23) மிட்செல் மார்ஷ் இடம் தனது விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் களமிறங்கி சிக்ஸர்கள் பறக்கவிட்டார், ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய இளம் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் 62(48)அரைசதம் கடந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவரில் இலக்கை அடைந்து ஐபிஎல் 2023 ஆம் தொடரில் 2வது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது, மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக 2 வது தோல்வியை பதிவு செய்துள்ளது.