மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை சிதறடித்த குஜராத் டைட்டன்ஸ்..!! கில் மில்லர் அசத்தல்..!!| gujarat smashed mumbai bowlers 2023

ஐபிஎல் 2023 அரங்கில் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் மும்பை அணி பவுலிங்கை சிதறடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தார்கள் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய தொடக்க வீரர் சுப்மான் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் பதிவு செய்து அசத்தினார், மற்றொரு முனையில் களமிறங்கிய முன்னணி வீரர்கள் அனைவரும் உடனுக்குடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் தொடக்கத்தில் இருந்து அசத்தலாக விளையாடி வந்த குஜராத் அணி வீரர் சுப்மான் கில் 56(34) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்து டேவிட் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் அணியின் நிலையை உயர்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி பவுலர்களை நாலா பக்கமும் சிதறடிக்கும் வகையில் அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்திய குஜராத் அணி வீரர் அபினவ் மனோகர் 42(21) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார். அதன்பின் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் 46(22) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார், இறுதியாக களமிறங்கிய ராகுல் டெவாடியா தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 207 ரன்கள் பதிவு செய்தது.
மும்பை அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த இளம் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் வழங்கி 1 விக்கெட் கைப்பற்றி அசத்தினார், குஜராத் அணியின் அதிரடி ஆட்டத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி பதிலடி கொடுக்குமா..?? என்று பொறுத்திருந்து காண்போம்.