WPL 2023 : முதல் வெற்றியை நோக்கி குஜராத் ஜெயின்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதல்..!!

மகளிர் பிரீமியர் லீக் தொடர்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் தொடரில் முதல் வெற்றியை தொடரில் பதிவு செய்ய குஜராத் ஜெயின்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள்.
இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணிகள் 2 போட்டிகளில் விளையாடி இன்னும் தங்கள் முதல் வெற்றியை பெற முடியாமல் திணறி வருகிறார்கள். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளில் கட்டாயம் ஒரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முடியும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஸ்மிருதி மந்தனா தலைமையிலும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி சினே ராணா தலைமையிலும் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறது.இந்த இரு அணியின் கேப்டன்கள் தங்கள் அணிக்கு வெற்றியை பெற்று தர மிகவும் போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் பிரீமியர் லீக் போட்டி விவரங்கள் :
போட்டி : 6 வது லீக் போட்டி குஜராத் ஜெயின்ட்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
நேரம் & நாள் : 7:30 P.M (IST ) & புதன்கிழமை.
மைதானம் : பிரபோர்ன் மைதானம், மும்பை.
குஜராத் ஜெயின்ட்ஸ் அணி பிளேயிங் 11 (தோராயமான ) : சப்பினேனி மேகனா, சோபியா டன்க்லி, சுஷ்மா வர்மா (வி.கீ ), ஆஷ்லே கார்ட்னர், தயாளன் ஹேமலதா, அனாபெல் சதர்லேண்ட், ஹர்லீன் தியோல், சினே ராணா (கேப்டன்), கிம் கார்த், மான்சி ஜோஷி, தனுஜா கன்வார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளேயிங் 11 (தோராயமான ) : ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டேவின், எலிஸ் பெர்ரி, திஷா கசட், ரிச்சா கோஷ்(வி.கீ), ஹீதர் நைட், கனிகா அஹுஜா, மேகன் ஷட், ஸ்ரேயங்கா பாட்டீல், ப்ரீத்தி போஸ்/சஹானா பவார், ரேணுகா தாக்கூர் சிங்/கோமல் சன்சாத்.