WPL 2023 : சோபியா டங்கிலி, ஹர்லீன் டியோல் அசத்தல்..!! குஜராத் ஜெயின்ட்ஸ் அணி முதல் வெற்றி..!!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 6 வது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள்.இந்த போட்டியில் இரு அணிகளும் தங்கள் முதல் வெற்றியை தொடரில் பதிவு செய்ய முழுவீச்சில் செயல்பட்டார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது, குறிப்பாக அணியின் இளம் வீராங்கனைகள் சோபியா டங்க்லி 65(28) ரன்களையும் மற்றும் ஹர்லீன் டியோல் 67(45) ரன்களையும் பெற்று சிறப்பான அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி இமாலய இலக்கை பதிவு செய்ய உதவினார்கள்.
இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி 201 ரன்கள் பதிவு செய்தது, இதையடுத்து 202 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா வேகமாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் வீராங்கனை சோஃபி டேவின் 66(45) ரன்கள் பெற்று பெங்களூரு அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.
அதன்பின் களமிறங்கிய பெங்களூர் வீராங்கனைகள் கடைசி வரை முயன்றும் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 190 ரன்கள் மட்டுமே பெற முடிந்தது.குஜராத் ஜெயின்ட்ஸ் அணி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தியதால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணியின் முதல் வெற்றிக்கு முக்கிய காரணமாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சோபியா டங்கிலி ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு வெற்றி கூட பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறது, இதனால் பெங்களூர் அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.