WPL 2023 : குஜராத் ஜெயண்ட்ஸ் கேப்டன் பெத் மூனி தொடரில் இருந்து விலகல்..!! புதிய கேப்டன் நியமனம்..!! | gujarat giants captain beth mooney ruled out of wpl 2023

இந்திய மண்ணில் முதல் முறையாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் பெத் மூனி தொடரில் இருந்து முழுமையாக விலகினார். இந்த தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்த புதிய கேப்டனாக சினே ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் பெத் மூனி காயம் அடைந்து போட்டியில் இருந்து பாதியில் விலகினார்.அதன்பின் 2 போட்டிகளில் குஜராத் அணியை துணை கேப்டன் சினே ராணா தான் வழிநடத்தினார்.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின்படி பெத் மூனி காயத்தில் இருந்து முழுமையாக குணமாக 4-6 வாரங்கள் ஆகும் என்பதால் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பெத் மூனி பதிலாக தொடரில் பங்கேற்க தென்னாபிரிக்கா வீராங்கனை லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த தொடரில் குஜராத் அணியை வழிநடத்த முழுநேர கேப்டனாக சினே ராணா மற்றும் துணை கேப்டனாக ஆஷ்லே கார்ட்னர் அணி நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தங்கள் முதல் வெற்றியை தொடரில் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி : சினே ராணா (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர் (துணை கேப்டன்), லாரா வால்வார்ட், சோபியா டன்க்லி, அனாபெல் சதர்லேண்ட், ஹர்லீன் டியோல், கிம் கார்த், எஸ் மேகனா, ஜார்ஜியா வேர்ஹாம், மான்சி ஜோஷி, தயாளன் ஹேமலதா, மோனிகா படேல், தனுஜா கன்வர், சுஷ்மா வர்மா ஹர்லி கலா, அஷ்வனி குமாரி, பருணிகா சிசோடியா, ஷப்னம் ஷகில்.