சுப்மனின் மெர்சலான பேட்டிங்...குஜராத் அமோக வெற்றி | GT vs SRH IPL 2023 Match Highlights

நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐபிஎல் 2023 தொடரின் 62வது லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்தது. இதில் டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்:
குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விரிதிமான் சாஹா மற்றும் ஷுப்மான் கில் முதலில் களத்தில் இறங்கினர். முதல் ஓவரின் 3வது பந்தில் விரிதிமான் சாஹா (0) அவுட் ஆகினார். அவரைத் தொடர்ந்து சாய் சுதர்ஷன் (47), ஹர்சிகா பாண்டியா (8), டேவிட் மில்லர் (7), ராகுல் தெவதியா (3), ரஷித் கான் (0), நூர் அகமது (0), முகமது ஷமி (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் ஷுப்மான் கில் மட்டும் தனியாக நின்று 58 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். அவர் 19வது ஓவரில் அவுட் ஆக, போட்டியின் முடிவில் தாசுன் ஷனகா (9) மற்றும் முகமது சர்மா (0) அவுட் ஆகாமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் குஜராத் அணியின் 5 விக்கெட்டுகளை ஹைதெராபாத் அணியின் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் எடுத்து அசத்தினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்:
அடுத்து விளையாட களமிறங்கிய ஹைதெராபாத் அணி வீரர்கள் அன்மோல்ப்ரீத் சிங் (5), அபிஷேக் ஷர்மா (5), ஐடன் மார்க்ரம் (10), ராகுல் திரிபாதி (1), சன்வீர் சிங் (7), அப்துல் ஷமத் (4), மார்கோ ஜான்சன் (3), புவனேஷ்வர் குமார் (27) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹென்ரிச் கிளாசென் மட்டும் 16வது ஓவர் வரையில் விளையாடி அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்துள்ளார். போட்டியின் முடிவில் மயங்க் மார்க்கண்டே (18) மற்றும் ஃபசல்ஹாக் ஃபாரூக்கி (1) அவுட் ஆகாமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் ஹைதெராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள் முகமது சமி மற்றும் முகமது சர்மா இருவரும் தனி தனியாக 4 விக்கெட் எடுத்து மிரட்டினார்கள். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.