மொத்தமாக சொதப்பிய மும்பை...அசால்ட்டாக Finals-க்குள் நுழைந்த குஜராத் | MI vs GT IPL 2023 Match Highlights

நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் 2023 தொடரின் 73வது லீக் போட்டி மும்பை இண்டியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள் என்பதால் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்:
குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சாஹா மற்றும் ஷுப்மன் கில் அட்டகாசமான தொடக்கத்தை பதிவு செய்தனர். இருவரும் பௌண்டரி, சிக்ஸ் என்று மாறி மாறி அடிக்க போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் குவிய தொடங்கின. ஆனால் 6வது ஓவரில் பியூஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் சிக்கி விருத்திமான் சாஹா (18) ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சாய் சுதர்ஷன் களமிறங்கினார். இந்த போட்டியில் ஷுப்மன் கில் வேற லெவல் பேட்டிங் செய்து மும்பை அணியை கதற வைத்தார். மொத்தம் 7 பௌண்டரி, 6 சிக்ஸ் அடித்து 129 ரன்கள் எடுத்தார். 16வது ஓவர் முடிவில் ஆகாஷ் மத்வால் பௌலிங்கால் அவுட் ஆகினார். இவரைத் தொடர்ந்து சாய் சுதர்ஷன் (43) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஹர்திக் பாண்டியா (28) மற்றும் ரஷித் கான் (5) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.
மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்:
அதனைத் தொடர்ந்து மும்பை அணியின் வீரர்கள் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சற்று சொதப்ப ஆரம்பித்தனர். ரோஹித் சர்மா (8), நேஹால் வதேரா (4), கேமிரான் கிரீன் (30), சூர்யகுமார் யாதவ் (61), திலக் வர்மா (43), விஷ்ணு வினோத் (5), டிம் டேவிட் (2), கிறிஸ் ஜோர்டான் (2), பியூஷ் சாவ்லா (0), குமார் கார்த்திகேயா (6) என்று ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜேசன் பெஹ்ரென்ட்ராஃப் (3) மட்டும் தான் அவுட் ஆகாமல் இருந்தார். 18.5 ஓவர் முடிவில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து மும்பை இண்டியன்ட்ஸ் அணி 171 ரன்கள் எடுத்து தோல்வியடைந்து. குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அடுத்து மே 28 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் 2023-ன் இறுதி போட்டி நடைபெற உள்ளது.