இறுதி வரை போராட்டம்...தெறிக்க விட்ட குஜராத் அணி! | GT vs LSG IPL 2023 Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 51வது லீக் போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் - ஷுப்மான் கில், எச்.எச்.பாண்டியா(சி), ஏ மனோகர், டி.ஏ.மில்லர், விஜய் சங்கர், ஆர். தெவாடியா, விருத்திமான் சாஹா, ரஷித் கான், எம். ஷமி, எம்.எம்.சர்மா, நூர் அகமது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் - எம்பி ஸ்டோனிஸ், ஒய்எஸ் தாக்கூர், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, கேஎச் பாண்டியா(சி), ஸ்வப்னில் சிங், நிக்கோலஸ் பூரன், கியூ டி காக், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்.
குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்:
முதல் இன்னிங்ஸ் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணி தரமான சம்பவத்தை நிகழ்த்தி வந்தது. விருத்திமான் சாஹா மற்றும் ஷுப்மான் கில் இருவரும் மட்டுமே இன்றைய மேட்ச்சை விளையாடினார்கள். சிக்ஸ், பௌண்டரி என்று மாறி மாறி அடித்த இவர்களின் பார்ட்னெர்ஷிப் 142 ரன்கள் குஜராத் அணிக்கு வந்து சேர்ந்தது. 12வது ஓவரில் விருத்திமான் சாஹா (81) அவுட் ஆகினார். பின்னர் களமிறங்கிய ஹர்டிக் பாண்டிய 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷுப்மான் கில் (91) மற்றும் டேவிட் மில்லர் (21) இவ்வருமே சேர்ந்து ஆட்டத்தை முடித்து வைத்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்:
லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் மற்றும் கியூ டி காக் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளித்து இருவரும் அருமையாக விளையாடி வந்தனர். ஆனால் 8வது ஓவரில் கைல் மேயர்ஸ் (48) அவுட் ஆகினார். பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா பொறுமையாக ரன் எடுக்க ஆரம்பிதார். இருப்பினும் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பிறகு களத்தில் கியூ டி காக் மற்றும் ஸ்டோனிஸ் இருவரும் அணியின் வெற்றியை நோக்கி விளையாட ஆரம்பித்தனர். 15 ஓவர் முடிவில் 30 பந்துகளுக்கு 80 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. இருப்பினும் அடுத்த ஓவரில் கியூ டி காக் (70) அவுட் ஆனது லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆயுஷ் படோனி அடுத்தது அணிக்காக விளையாட ஆரம்பித்தார். இறுதி ஓவரில் லக்னோ அணியின் மூன்று வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். போட்டியின் இறுதியில் குஜராத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றது.