இறுதி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அசத்தல் வெற்றி..!! கில் அதிரடி ஆட்டம்..!! | gt win against pbks 2023 match

ஐபிஎல் 2023 தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் இறுதி ஓவர் வரை வெற்றிக்கான போராட்டம் நடைபெற்ற நிலையில், அசத்தலாக விளையாடிய மிரட்டல் அணியாக விளங்கும் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறி உடனுக்குடன் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில் சற்று பொறுப்புடன் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்தார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்கள் பதிவு செய்த நிலையில், அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி துவக்க வீரர்கள் அதிரடியான துவக்கத்தை அளித்து பஞ்சாப் அணி பவுலர்களை சிதறடித்தார்கள். குஜராத் அணி துவக்க வீரர் சாஹா 30(19) ரன்களில் பஞ்சாப் பவுலர் ரபாடா பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் அதிரடி இளம் வீரர் ஷுப்மன் கில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் பதிவு செய்து அசத்தினார்.இதற்கு இடையில் குஜராத் அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா வேகமாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
அதன்பின் பஞ்சாப் அணி பவுலர்கள் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய நிலையில், இறுதி ஓவர் வரை சென்ற போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த சாம் குர்ரான் குஜராத் அணி அதிரடி வீரர் ஷுப்மன் கில் 67(49) விக்கெட்டை பெற்று போட்டியின் போக்கை மாற்றினார். அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ராகுல் டெவாடியா அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வழக்கம் போல் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இறுதி வரை போராடியு நிலையில் , அசத்தலாக விளையாடிய குஜராத். டைட்டன்ஸ் அணி வெற்றியை பெற்று அசத்தியது.இந்த வெற்றியின் மூலம் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் தனது வெற்றி பயணத்தை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.