குஜராத் டைட்டன்ஸ் அசத்தல் வெற்றி..!! தொடர் தோல்வியில் மும்பை இந்தியன்ஸ்.!! | gt win against mi 2023

ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடைபெற்ற 35 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் , பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அதிரடியை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணி மிரட்டல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணியை துவம்சம் செய்யும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கத்தை அதிர வைத்தார்கள், குறிப்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணியின் இளம் வீரர் சுப்மான் கில் அரைசதம் பதிவு செய்து அசத்தினார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடி ஆட்டத்தின் விளைவாக 208 ரன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முன்னணி வீரர்கள் ஆரம்பம் முதலே குஜராத் அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறி உடனுக்குடன் ஆட்டமிழந்தார்கள்.
மும்பை அணி சார்பில் பொறுப்புடன் விளையாடி வந்த இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிறீன் 33(26) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் களமிறங்கிய மும்பை அணியின் அதிரடி வீரர் சூரிய குமார் யாதவ் கடைசி நம்பிக்கையாக இருந்த நேரத்தில் 23(12) ரன்கள் பெற்று விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அதன்பின் மும்பை அணி சார்பில் இறுதியில் சிறப்பாக விளையாடி வந்த நேஹால் வதேரா 21 பந்துகளில் 40 ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை பெற்றார். அதே போல் அசத்திய இளம் பவுலர் நூர் அகமது 3 விக்கெட்டுகளை பெற்று குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினார் என்று கூறினால் மிகையில்லை.
இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் பின்தங்கி உள்ளது, குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.