ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு...பிளேயிங் லெவன் அப்டேட்..! | GT vs RR IPL 2023 Toss Update

ஐபிஎல் 2023 தொடரின் 23வது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியின் டாஸ் மற்றும் பிளேயிங் லெவென் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஐபிஎல் சீரிஸின் மிக முக்கிய அணிகள் இன்று போட்டியிட உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு அணிகளும் இதுவரை 4 போட்டிகள் விளையாடி உள்ளது. இரண்டு அணிகளும் மொத்தம் 3 போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் தரவரிசை பட்டியலில் முன்னணியில் இருக்கிறது. எனவே, இன்று கடுமையான போட்டி நிகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல ரசிகர்களும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் மிக ஆர்வமாக உள்ளனர்.
ஹர்டிக் பாண்டியா தலைமையில் குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணியும் மோதிக்கொள்ள உள்ளனர். இருவருமே அணியை வழிநடத்தி செல்வதில் சளைத்தவர்கள் இல்லை. ஆகவே இந்த போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்து முதலாம் இடத்திற்கு வருகிறதா? அல்லது குஜராத் அணியை தோற்கடித்து ராஜஸ்தான் அணி தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்ளுமா? என்பதை போட்டியின் இறுதியில் தெரிந்துக்கொள்வோம்.
தற்போது நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. ஆகவே, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவன்: விருத்திமான் சாஹா(w), சுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(c), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.