குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த முழு அப்டேட்..!! | gt vs rr 2023 prediction

இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் அதிரடி அணிகளாக விளங்கும் குஜ்ராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள்.மேலும் இந்த மிரட்டல் போட்டியின் பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வீரர் ஹர்திக் பாண்டியா தலைமையில் வெற்றிகளை பெற்று வரும் மிரட்டல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் விளங்குகிறது. அதே சமயத்தில் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் தலைமையில் முன்னணி வீரர்கள் அடங்கிய அணியாக விளங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து அணிகளும் சவால் விடும் வகையில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது.
போட்டி குறித்த விவரம் :
23 வது லீக் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & ஞாயிற்றுக்கிழமை
தேதி : 16 ஏப்ரல் 2023
மைதானம் : நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் ஆனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த உதவும் தன்மை கொண்டது என்று தெரிய வந்துள்ளது, எனவே பேட்ஸ்மேன்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் போட்டியின் தொடக்கத்தில் பவுலர்கள் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்த பிட்ச் உதவும் என்று தெரிய வந்துள்ளது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன்: ஜோஸ் பட்லர்
துணை கேப்டன்: ஷுப்மான் கில்
விக்கெட் கீப்பர்: சஞ்சு சாம்சன்
பேட்ஸ்மேன்கள் : டேவிட் மில்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால்,
ஆல்-ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, ஜேசன் ஹோல்டர்,ரஷித் கான்.
பந்துவீச்சாளர்கள்: முகமது ஷமி,யுஸ்வேந்திர சாஹல்,மோகித் சர்மா.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 வெற்றிகளை பெற்று ஒரே ஒரு தோல்வியை மட்டும் பெற்றுள்ளது, அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பங்கேற்ற 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியை பெற்று அசத்தி வருகிறது. இந்நிலையில் தொடரில் சிறந்த பார்மில் இருக்கும் 2 அணிகளுக்கு இடையில் நடக்க உள்ள போட்டியாக இது உள்ளதாக கட்டாயம் ஒரு அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்களது நிலையை நிரூபிக்க இரு அணிகளையும் முழுவீச்சில் செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை, ஆனால் ஐபிஎல் அரங்கில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை மேலும் போட்டி குஜராத் அணியின் ஹோம் கிரௌண்டில் நடைபெறுவதால் வெற்றி வாய்ப்பு குஜராத் அணிக்கு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : விருத்திமான் சாஹா (வி.கீ ), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் & வி.கீ), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா/டிரென்ட் போல்ட்.