குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | gt vs mi 2023 toss update

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள்.இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் கலக்கி வரும் ரஷீத் கான் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை 3 முறைக்கு மேல் ஆட்டமிழக்க வைத்துள்ளார், எனவே இருவருக்கும் இடையில் நல்ல போட்டியை எதிர்பார்க்கலாம். மேலும் குஜராத் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் கடந்த போட்டியில் அரைச்சதம் பதிவு செய்து நல்ல பார்மில் உள்ளார்.
அதே போல் கடந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவினாலும், அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அசத்தல் ஆல்ரவுண்டர் கேமரூன் கிறீன் மற்றும் சூர்யா குமார் யாதவ் மிரட்டல் பார்மில் உள்ளார்கள்.இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் ஒரு அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார், எனவே முதலில் பேட்டிங் செய்ய ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் : விருத்திமான் சாஹா(வி.கீ), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் : ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(வி.கீ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.