குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான கணிப்புகள் அடங்கிய முழு அப்டேட்.!! |gt vs mi 2023 prediction
![குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான கணிப்புகள் அடங்கிய முழு அப்டேட்.!! |gt vs mi 2023 prediction](https://www.sportspartans.com/assets/uploads/news-2174.jpg)
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த மிரட்டல் போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு , ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய தகவல்களை காண்போம்.
ஐபிஎல் 2023 அரங்கில் குஜராத் டைட்டன்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி பங்கேற்ற 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை தொடரை தோல்விகள் உடன் தொடங்கினாலும், அதன்பின் தொடர் வெற்றிகள் மூலம் புள்ளிபட்டியலில் 6 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று 7 வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னேற இரு அணிகள் சார்பில் கட்டாயம் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்த விவரம் :
35 வது லீக் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்,
நேரம் & நாள் : 7:30 p.m & செவ்வாய்க்கிழமை
தேதி : 25 ஏப்ரல் 2023
மைதானம் : நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - கேமரூன் கிரீன்
துணை கேப்டன் - ரோகித் சர்மா
விக்கெட் கீப்பர் - இஷான் கிஷன்
பேட்ஸ்மேன்கள் - திலக் வர்மா, டேவிட் மில்லர், சூர்யகுமார் யாதவ்.
ஆல்-ரவுண்டர்கள் - ரஷித் கான், டிம் டேவிட்.
பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா ,ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ,மோகித் சர்மா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள நரேந்திர மோடி மைதானம் முதலில் வேகப்பந்து பவுலர்களுக்கு உதவும் என்று தெரிய வந்துள்ளது. அதன்பின் போட்டியின் நடுவில் ஸ்பின்னர்கள் களத்தில் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பிட்சில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முதலில் பேட்டிங் செய்யும் அணி 175 பதிவு செய்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
வெற்றி கணிப்பு :
குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் வெற்றிகள் பெற்று முன்னிலையில் உள்ளது, குறிப்பாக கடைசியாக விளையாடிய போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான கலக்கல் வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பதிவு செய்த பிறகு கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் போராடி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை, மேலும் இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சம அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : விருத்திமான் சாஹா(வி.கீ), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், மோகித் சர்மா.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ரோகித் சர்மா(கேப்டன் ), இஷான் கிஷன்(வி.கீ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.