குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி குறித்த கணிப்புகள்..!!

ஐபிஎல் 2023 தொடரில் அடுத்து நடைபெற உள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ள நிலையில், இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் கணிப்பு உள்ளிட்ட விவரங்களை காண்போம்.
ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் 2023 ஆம் தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறது. அதே சமயத்தில் நிதிஷ் ராணா தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2023 அரங்கில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் கடைசியாக விளையாடிய போட்டியில் அதிரடி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
போட்டி குறித்த விவரம் :
13 வது லீக் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நேரம் & நாள் : 3:30 p.m & ஞாயிற்றுக்கிழமை
தேதி : 9 ஏப்ரல் 2023
மைதானம் : நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 அரங்கில் பல அதிரடி வீரர்களை கொண்டுள்ள மிரட்டல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியே சந்திக்காமல் வெற்றிகளை மட்டும் பெற்று அசத்தல் அணியாக வலம் வருகிறது. அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியில் கட்டாயம் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகள் சார்பிலும் அதிரடியான போட்டி அரங்கேறும் என்பதில் ஐயமில்லை, ஆனால் வெற்றி வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தான் அதிகமாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - ஹர்திக் பாண்டியா & ஆண்ட்ரே ரசல்
துணை கேப்டன் - முகமது ஷமி & ஷர்துல் தாக்கூர்
கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்
ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா (கேட்ச்), ஆண்ட்ரே ரஸ்ஸல் (விசி), சுனில் நரைன்
பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ரஷித் கான், ஷர்துல் தாக்கூர், அல்சாரி ஜோசப்
குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேயிங் லெவன் (தோராயமான): விருத்திமான் சாஹா(வாரம்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், விஜய் சங்கர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேயிங் லெவன் (தோராயமான): மந்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் சர்மா