குஜராத்தின் மாஸ் ஆட்டம்… குஜராத்தின் கனவை தவிடு பொடியாக்குமா கேகேஆர் அணி | GT vs KKR IPL 2023

விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2023 போட்டியின் 13 ஆவது போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணி மோதுகிறது. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2023ல் முதல் போட்டியாக குஜராத் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி வென்றது. இதில், இரண்டாவதாக கொல்கத்தா அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதியதில் கொல்கத்தா அணி தோல்வியுற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெவ்வேறு போட்டிகளிலுமே இந்த இரு அணிகளுமே வெற்றியைத் தழுவியது. எவ்வாறாயினும், இரு அணிகளை ஒப்பிடும் போது குஜராத் அணியே அதிக முறை வென்றுள்ளது. இருப்பினும் கொல்கத்தா அணி தனது வெற்றியைப் பதிவிட முழு முயற்சியுடன் இறங்கியுள்ளது.
குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் முதலில் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது குஜராத் அணி. அதன் படி, குஜராத் அணியில் இருந்து முதலில் களமீறங்கிய கில் மற்றும் சஹா ஆட்டத்தைத் தொடங்கினர்.
முதலில் ஆட்டத்தை மெதுவாக தொடங்கிய நிலையில், கடைசி 20 ஆவது ஓவரில் நல்ல ரன்களை தந்துள்ளார் விஜய் சங்கர். 24 பந்துகளுக்கு 63 ரன்கள் அடித்து 204 ரன்களை தனது அணிக்காக அடித்துத் தந்துள்ளார். மேலும், கொல்கத்தா அணிக்கு 205 ரன்களை டார்கெட் வைத்துள்ளார். குஜராத்தின் அதிரடியான ஆட்டத்திற்கு கொல்கத்தா அணியின் எதிராட்டம் எப்படி இருக்கப் போகுது என காத்திருந்து பார்க்கலாம்.