கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களைப் பதிவிட்டு வென்ற கொல்கத்தாவின் மாஸ் வெற்றி.! | GT vs KKR IPL 2023

விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2023 போட்டியின் 13 ஆவது போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணி மோதுகிறது. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் முதலில் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது குஜராத் அணி. இதில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி முதலில் ஆட்டத்தை மெதுவாகத் தொடங்கியது. ஆனால், கடைசியில் சூறாவளி போல இறங்கிய விஜய் சங்கர் 24 ஓவரில் 63 ரன்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் படி, கொல்கத்தா அணி வெற்றி பெற 205 ரன்களை இலக்காகக் கொண்டிருந்தது.
கொல்கத்தா அணியில் முதலில் குர்பாஸ் மற்றும் ஜகதீசன் ஆட்டத்தைத் தொடங்கினர். குஜராத் அணி ஆடியதைப் போலவே இந்த அணியும் மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கியது. ஆனால், பின்னர் வேகமாக ரன்களைக் குவித்து வந்தது. கடைசியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி. அதன் படி, கொல்கத்தா அணி பூஜ்ஜிய பந்துகளில் 207 ரன்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.