குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்.!! | gt vs dc 2023 toss update

ஐபிஎல் 2023 அரங்கில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள. இந்த மிரட்டல் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு தொடரில் 6 வெற்றிகளை பெற்று அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்குகிறது, குறிப்பாக அணியின் முன்னணி வீரர்கள் டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் உள்ளிட்டோர் அசத்தல் பார்மில் உள்ளதால் அணிக்கு பக்கபலமாக உள்ளது.
அதே சமயத்தில் டேவிட் வார்னர் தலைமையில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.டெல்லி அணிக்காக தனி ஒருவராக போராடி வரும் கேப்டன் டேவிட் வார்னருக்கு உதவும் வகையில் கடந்த போட்டியில் அணியின் வீரர்கள் பில் சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் பழைய பார்முக்கு திரும்பி உள்ளார்கள்.
இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற டெல்லி அணி முழு வீச்சில் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் குஜராத் அணி தனது அசத்தல் பார்மை தொடரும் வகையில் இந்த போட்டியில் வெற்றி பெற முயலும் என்பதால் ஆட்டம் அதிரடியாக இருக்கும் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் : விருத்திமான் சாஹா (வி.கீ), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷ் லிட்டில்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன் : டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (வி.கீ), மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ், பிரியம் கார்க், அக்சர் படேல், ரிபால் பட்டேல், அமன் ஹக்கிம் கான், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா.