குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான கணிப்புகள் அடங்கிய விவரம்…! | gt vs dc 2023 prediction

ஐபிஎல் 2023 தொடரில் அடுத்து நடைபெற உள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை ஒரு மிரட்டல் அணியாக 2023 ஐபிஎல் தொடரில் வலம் வருகிறது, குறிப்பாக கடைசியாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அசத்தல் வெற்றியை பெற்று அதிரடி பார்மில் உள்ளது. அதே சமயத்தில் டெல்லி கேப்பிடல் அணியை பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இனி மீதம் உள்ள போட்டிகளில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்க உள்ளது
போட்டி குறித்த விவரம் :
44 வது லீக் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & செவ்வாய்க்கிழமை
தேதி : 2 மே 2023
மைதானம் : நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - ஹர்திக் பாண்டியா
துணை கேப்டன் - மிட்செல் மார்ஷ்
விக்கெட் கீப்பர் - பில் சால்ட்
பேட்ஸ்மேன்கள் - ஷுப்மான் கில், டேவிட் வார்னர், டேவிட் மில்லர்.
ஆல்-ரவுண்டர்கள் - விஜய் சங்கர், அக்சர் படேல்
பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார்.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும் என்பதால் இரு அணிகள் சார்பில் மிரட்டல் பேட்டிங் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் விளையாடும் அணி சராசரியாக 160 ரன்களுக்கு மேல் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, குறிப்பாக 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதே சமயத்தில் டேவிட் வார்னர் தலைமையில் பெரிய அளவில் வெற்றிகள் பெற முடியாமல் 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு நடப்பு தொடரில் மிரட்டல் அணியாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தான் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : விருத்திமான் சாஹா (வி.கீ), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோஷ் லிட்டில்.
டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : டேவிட் வார்னர் (கேப்டன்), பில் சால்ட் (வி.கீ), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, சர்பராஸ் கான், லலித் யாதவ் / ரிபால் பட்டேல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷான் சர்மா, முகேஷ் குமார்.