ஐபிஎல் 2023 : குஜராத் vs சென்னை லீக் போட்டி ட்ரீம் லெவன் கணிப்புகள்..!!

ஐபிஎல் 2023 தொடரின் முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள், இந்நிலையில் இரு அணிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவும் வீரர்கள் அடங்கிய ட்ரீம் லெவன் லெவன் டீம் பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடர் ஆரம்பம் ஆன உடனே அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாட்டம் தான், அதற்கு முக்கிய காரணமாக அனைத்து முன்னணி கிரிக்கெட் வீரர்களும் ஒன்றாக இணைந்து மோதும் ஒரு சிறந்த தொடராக ஐபிஎல் தொடர் விளங்குகிறது என்பது தான். ஐபிஎல் தொடர் தொடங்கிய உடனே கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் ட்ரீம் லெவன் போட்டிக்கான மோகம் தொடங்கி விடும், எனவே அனைவரையும் தங்களின் சிறந்த அணியை தேர்வு செய்து போட்டியை கண்டு மகிழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் : ருதுராஜ் கெய்க்வாட்
துணை கேப்டன் : ஹர்திக் பாண்டியா
பேட்ஸ்மேன்கள் : ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், கேன் வில்லியம்சன், டெவன் கான்வே
ஆல்ரவுண்டர்கள் : ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ்
பவுலர்கள் : தீபக் சாஹர், முகமது ஷமி, ராஷித் கான்.
விக்கெட் கீப்பர் : எம்.எஸ்.தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் 2023 ஆம் தொடரை வெற்றிகரமாக ஆரம்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது,எனவே முதல் லீக் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் தங்கள் வெற்றி பயணத்தை தொடர வேண்டும் என்பதால் முதல் லீக் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும், எனவே ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி மிரட்டலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா(வி.கீ), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், மேத்யூ வேட், ராகுல் டெவாடியா, ரஷித் கான், ஷிவம் மாவி, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(கேப்டன் & வி.கீ), தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மதிஷா பத்திரனா.