ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் டாஸ், பிளேயிங் லெவன் அப்டேட்..!! | GT vs CSK 2023 toss update

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன குஜராத் அணியும் எம்.எஸ்.தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ள முதல் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் வெளியானது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தயாரானது. இந்நிலையில் சென்னை அணியின் அதிரடி பேட்டிங்கை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வி அடைந்து தொடரில் விட்டு முன்னதாக வெளியேறிய நிலையில், ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த 2022 ஆண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு தொடரையும் வெற்றியுடன் தொடங்க குஜராத் அணி முழுவீச்சில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் : விருத்திமான் சாஹா(வி.கீ), சுப்மான் கில், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் ), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.