முகமது ஷமி வேகத்தில் சிதறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் ..!! அமன் ஹக்கிம் கான் அசத்தல்..!! | gt bowling vs dc 2023

ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலர் முகமது ஷமி அசத்தல் பவுலிங்கை டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்ஸ்மேன்களை சிதறடித்து அரங்கை அதிர வைத்தார் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலர்கள் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி டெல்லி அணியின் முன்னணி வீரர்களை திணற செய்தார்கள்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் முன்னணி பவுலர் முகமது ஷமி டெல்லி அணியின் வீரர்கள் பில் சால்ட் 0(1), ரிலீ ரோசோவ் 8(6), மணீஷ் பாண்டே 1(4), பிரியம் கார்க் 10(14) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பே டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் 2(2) ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அக்சர் படேல் மற்றும் அமன் ஹக்கிம் கான் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்தார்கள். இந்நிலையில் 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன் பதிவு செய்தது.டெல்லி அணியின் நம்பிக்கையாக இருந்த அக்சர் படேல் 27(30) உடைய விக்கெட்டை மோஹித் சர்மா கைப்பற்றி அசத்தினார்.
டெல்லி அணிக்காக இறுதி வரை பொறுப்புடன் நிதானமாக விளையாடிய அமன் ஹக்கிம் கான் அரைசதம் பதிவு செய்து அசத்தினார், குறிப்பாக 44 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் உட்பட 51 ரன்கள் பெற்று ஐபிஎல் அரங்கில் முதல் அரைசதம் பதிவு செய்தார் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணியின் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தியும் டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடிய நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் 130 ரன்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.