IND VS AUS TEST 2023 : விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் இந்திய வீரர்..!! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்க படும் விராட் கோலி சர்வதேச அரங்கில் அசத்தல் சாதனையை படைத்தார், அதை அடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கோலி தான் சிறந்த வீரர் என்று கூறியுள்ளார்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 2 வெற்றிகளை பெற்று இந்திய அணி 2-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது, இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் பெற்ற நிலையில் நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் ஆட்டமிழந்தார்.
அதன்பின் 2வது இன்னிங்ஸில் 20 ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார், இந்த போட்டியில் விராட் கோலி சர்வதேச அரங்கில் 25000 ரன்கள் (549 இன்னிங்ஸில்) பதிவு செய்தார். மேலும் வேகமாக 25000 சர்வதேச ரன்கள் பெற்றவர் என்ற சாதனையை படைத்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்(577 இன்னிங்ஸில் ) சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விராட் கோலி தான் சிறந்த வீரர் என்று கூறியுள்ளார், அதாவது விராட் கோலி இந்திய மண்ணில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது போன்று தான் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் விளையாடுகிறார். அவரின் ஆட்டத்தில் எப்போதும் மாற்றம் இருந்தது இல்லை என்று கம்பீர் கூறினார்.
விராட் கோலி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து தொடர்களிலும் சிறந்த ரெகார்டை வைத்திருக்கும் சிறந்த வீரர் என்று கம்பீர் கூறினார், மேலும் எனக்கு ரன்கள் பட்டியல் பற்றி எல்லாம் தெரியாது ஆனால் 25000 சர்வதேச ரன்களை குறைந்த இன்னிங்ஸில் பெறுவது சாதாரண காரியம் இல்லை எனவே கோலி ஒரு சிறந்த வீரர் என்று கம்பீர் புகழ்ந்து தள்ளினார்.
இந்திய அணியின் தூணாக விளங்கி வரும் விராட் கோலி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து நல்ல பார்மில் உள்ள நிலையில், அடுத்து நடைபெற உள்ள 3 வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து டெஸ்ட் தொடரில் நீண்ட காலமாக சதம் அடிக்காமல் உள்ள நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..