சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பார்ட்னர் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ..!! டிக்கெட்கள் இலவசம்..!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் ஆதரவுடன் முதன் முறையாக சென்னை அணியின் பார்ட்னராக பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் ஆன கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் களமிறங்குகிறது.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமானது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் டிரோன்கள் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது, மேலும் இளைஞர்களுக்கு ட்ரோன் உற்பத்தி தொழில்நுட்பத்தில் பயிற்சியும் அளித்து வருகிறது. ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆன கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு சமீபத்தில் தலைசிறந்த நிறுவனமாக முன்னேறி உள்ளது ,குறிப்பாக இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக எம்.எஸ்.தோனி விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஒரு அணிக்கு பார்ட்னராக களமிறங்கும் ட்ரான் உற்பத்தி நிறுவனமாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உள்ளது. இந்த பங்களிப்பு குறித்து பேசிய நிறுவன உரிமையாளர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் ஐபிஎல் தொடரில் மிக சிறந்த முன்னணி அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பார்ட்னராக பங்கேற்பது மிகுந்த ஆனந்தத்தை அளிப்பதாக தெரிவித்தார், மேலும் இரு நிறுவனங்களும் இணைந்து இளம் தலைமுறையின் முன்னேற்றத்திற்காகவும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்.
இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிக்கான டிக்கெட்டுகள் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.