ராஜஸ்தான் ராயல்ஸ் எதிராக காயத்துடன் களமிறங்கிய தோனி..!! பிளெமிங் பதிவு..!! | csk coach fleming about dhoni injury

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி காயத்துடன் களமிறங்கி விளையாடினார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதிவு செய்துள்ள கருத்து ரசிகர்கள் இடையில் நிகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முக்கிய தருணத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அணியின் கேப்டன் எம் எஸ் தோனி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கத்தை அதிர செய்தார்.
இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 17 பந்துகளில் 32 ரன்கள் பெற்று அசத்தினார், குறிப்பாக கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது 2 சிக்சர்கள் விளாசி அசத்திய அதிரடியாக விளையாடினார். அதன்பின் கடைசி பந்தில் 5 ரன்கள் பெற வேண்டும் என்ற நிலையில் இருந்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சந்தீப் சர்மா வீசிய யார்க்கர் பந்தை சிக்ஸராக மாற்ற முடியாமல் போனதால் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்தார், அதாவது இன்று களமிறங்கி அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய தோனி முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்ததாக கூறினார்.
அதனால் தான் போட்டியில் தோனி முழு திறனுடன் விளையாட முடியவில்லை, முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு கொண்டு இருக்கிறார் என்று கூறினார்.மேலும் தோனி எப்போதும் தனது உடல் திறன் மீது முழு கவனத்துடன் இருப்பார், சென்னை அணியில் சிறந்த உடல் திறன் உடன் உள்ள வீரர் அவர் என்று கூறினார்.
இந்த பதிவை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்கள், அதாவது இந்த போட்டி தோனி சென்னை அணிக்காக கேப்டன்சி செய்யும் 200 வது போட்டி முழு உடல் திறனுடன் இல்லாத போதும் களத்தில் இறங்கி அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக இறுதி வரை போராடியது தோனி சென்னை அணி ,ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் மீது வைத்துள்ள பற்றையும் தெளிவாக காட்டுகிறது என்று இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.