IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிலவும் குழப்பம்..!! டிராவிட் விளக்கம்..!!

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது, இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனை முடிவு செய்வதில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலியா அணி முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது, அதேபோல் இந்திய அணியும் தொடரில் 2வது வெற்றி பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் முடிவு செய்வதில் சற்று குழப்பம் நீடித்து வருகிறது, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். தற்போது முழுமையாக குணமாகி உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சற்று சறுக்கிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா.?? இல்லை இந்திய டெஸ்ட் அணியில் புதிதாக இணைந்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் சூர்யா குமார் யாதவ் பிளேயிங் லெவனில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது.இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தக்க விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்திய அணிக்கு காயத்தில் இருந்து திரும்பியுள்ள ஷ்ரேயஸ் ஐயர் ஒரு திறமையான பேட்ஸ்மேன் என்பதில் ஐயமில்லை, ஆனால் கடந்த ஒரு மாதங்களாக ஓய்வில் இருந்து விட்டு தற்போது 5 நாட்கள் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் உடனடியாக ஷ்ரேயஸ் ஐயர் விளையாடினால் முழுத்திறனுடன் பங்களிப்பை வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முழுத்திறனுடன் தயாராக இருந்தால் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று டிராவிட் கூறினார்.இந்திய அணியில் 2 வது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெற்றால் அணியின் பேட்டிங் ஆர்டர் பலமாகும் என்ற பரவலான கருத்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.