ஐபிஎல் 2023 தொடரில் சென்னை அணியின் முதல் போட்டியில் இருந்து கேப்டன் எம்.எஸ்.தோனி விலகல்..??

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் இன்று மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது, இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளார்கள், இந்த முதல் போட்டியில் இருந்து சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் முதல் அதிரடியாக கடந்த ஆண்டு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஐபிஎல் தொடரின் நாயகனாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே சென்னை அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த சோகம் ஆன தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் மற்றும் தூணாக விளங்கும் எம்.எஸ்.தோனி தனது இடது காலில் ஏற்பட்டுள்ள லேசான காயம் காரணமாக குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது, எனவே முதல் போட்டியில் சென்னை அணியை வழிநடத்த முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட தகவலின் படி, எம்.எஸ்.தோனி கட்டாயம் முதல் போட்டியில் களமிறங்குவார் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் போட்டியில் எம்.எஸ். தோனி களமிறங்கி ரசிகர்களுக்கு தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் மகிழ்ச்சியை அளிப்பாரா..?? என்று பொறுத்திருந்து காண்போம் என்பது குறிப்பிடத்தக்கது.