திணறினாலும் போராடி ரன் எடுத்த டெல்லி...டார்கெட் இது தான்! | IPL 2023 SRH vs DC 1st Innings Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 34 வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனால் முதல் இன்னிங்ஸில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பில் சால்ட் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரில் பில் சால்ட் புவனேஸ்வரின் பந்து வீச்சில் சிக்கி அவுட் ஆகினார். பின்னர் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் பொறுமையாக ரன் எடுக்க ஆரம்பித்தனர்.
அதன் படி, இருவரின் பார்ட்னர்ஷிப்பில் டெல்லி அணி 46 ரன்கள் எடுத்தது. ஆனால் டி.நடராஜனின் 4வது ஓவரில் இருந்து மிட்செல் மார்ஷால் (25) தப்பிக்க முடியவில்லை. அவரைத் தொடர்ந்து சர்பராஸ் கான் டெல்லி அணியின் வெற்றிக்காக விளையாட ஆரம்பித்தார். ஹைதராபாத் அணியின் பௌலர் வாஷிங்டன் குமாரின் 7 வது ஓவரில் ஹைதெராபாத் சிக்கி சின்னாபின்னமானது. எப்படி என்றால் இரண்டு பந்துகள் வித்தியாசத்தில் டேவிட் வார்னர் (21), சர்பராஸ் கான் (10) மற்றும் அமன் ஹக்கீம் கான் (4) ஆகியோர் அவுட் ஆகினர்.
இது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அடுத்து வரும் போட்டியாளர்கள் சற்று தயக்கத்துடன் விளையாட ஆரம்பித்தனர். இருப்பினும் அணியின் வெற்றியை தக்க வைக்க மணீஷ் பாண்டே மற்றும் அக்சர் படேல் நிதானமாக நின்று அடிக்க ஆர்மபித்தனர். இருவரும் அடுத்தடுத்து பௌண்டரி அடித்ததால் போட்டியின் நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 9 ஓவர்களாக ஒரு விக்கெட்டை எடுக்க டெல்லி அணி போராடிக் கொண்டு இருந்தது.
இதனை சாதகமாகக் கருதி பாண்டே மற்றும் அக்சர் ரன்களை அதிகரித்தனர். ஆனால் 17வது ஓவர் முடிவில் புவனேஸ்வரின் பந்து வீச்சில் படேல் (34) சிக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் அவுட் ஆக ஆர்மபித்தனர். அதன் படி மணீஷ் பாண்டே (34), anrej nortje (2) மற்றும் ரிபல் பட்டேல் (5) ரன்களில் அவுட் ஆகினர். 20 ஓவர் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தனர்.